உள்நாடு

ஜனவரி முதல் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

இந்த வருடம் ஜனவரி முதல் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைக் கடந்துள்ளது.

அதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 212,838 என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பதோடு அவர்களின் எண்ணிக்கை 37,383 ஆகும்.

மேலதிகமாக ரஷ்யா, பிரிட்டன், ஜேர்மனி, சீனா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

Related posts

வெளிநாட்டுக்கு செல்வோருக்கு அரசு விடுத்துள்ள அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நவீன் திசாநாயக்க நியமனம்

editor

மற்றுமொரு சிறுமி துஷ்பிரயோகம் : ஐவர் கைது