வகைப்படுத்தப்படாத

ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 133 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA)-இந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 அக அதிகரித்துள்ளதாக நோய் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியா நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன், டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 133 அக அதிகரித்துள்ளதுடன், டெங்கு காய்ச்சல் தொடர்பாக 13 ஆயிரத்து 683 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த பாதிப்பை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

 

 

Related posts

இன்று காலை ஈரான் நாடாளுமன்றத்துக்குள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு

பிறந்த குழந்தைக்கு தந்தை செய்த காரியம்

Cabinet papers to review Madrasas & MMDA