அரசியல்உள்நாடு

ஜக்கிய மக்கள் சக்தியில் ஒற்றுமை கிடையாது – அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப்

ஜனநாயக ரீரியில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணையோடு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்குமென பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமுக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தெரிவித்துள்ளார்.

கொட்டகலை தேசிய கல்லுாரியில் நேற்று (26) இடம்பெற்ற அல் முஸ்தப்பா சர்வதேச பல்கலைக்கழகத்தில் கற்கை நெறிகளை நிறைவு செய்து கொண்ட மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,

”நடந்து முடிந்து உள்ளுராட்சி சபைதேர்தலில் அதிகமான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்று இருக்கிறது. அந்தவகையில் ஆட்சியமைக்க கூடிய வாய்ப்புகள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சி சபைகளிலும் எமது அரசாங்கம் ஆட்சியமைக்கும். மக்கள் வழங்கிய ஜனநாயகத்தை ஒரு சிலர் சீர்குழைப்பதற்காக எதிரும் புதிராக இருந்தவர்கள் இன்று அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு மீண்டும் ஊழல்களில் ஈடுபட்டு வருவாயை ஈட்டிகொள்வதற்காக இன்று ஒன்றினைந்துள்ளார்கள்.

ஜக்கிய மக்கள் சக்தி நாட்டில் இன்று ஜக்கியமில்லாத ஒரு கட்சியாக காணப்படுகிறது. நாங்கள் தெளிவாக கூறுகிறோம். இந்த நாட்டை வாங்குரோத்துயடைய செய்த எந்த கட்சிகளுடனும் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள போவதில்லை.

மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள், சுயாதீனமாக செயற்பட்டவர்கள் ஆகியோர் நாங்கள் முன்னெடுக்கின்ற நல்லபணியில் இணைந்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

நாங்கள் உறுப்பினர்களை அதிகமாக பெற்றுள்ளமையால் ஆட்சியமைக்கும் அதிகாரமும் பொறுருப்பும் எம்மிடமுள்ளது.

அவ்வாறு ஆட்சியமைக்குபோது எங்களுக்கு கட்சிகலோ குழுக்கலோ ஒத்துழைப்பு வழங்கலாம். ஜக்கிய மக்கள் சக்தியில் ஒற்றுமை கிடையாது. சஜித் பிரேமேதாச கட்சியை முன்னெடுத்து செல்ல முடியாத ஒரு சூழ்நிலைக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்” என்றார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் உட்பட அல் முஸ்தப்பா சர்வதேச பல்கலைக்கழகத்தின் இலங்கை நாட்டுக்கான ஈரான் தூதுவர் ஷியாட் சீனுவேல் அபீதீன் மிராப்டீம் மற்றும் நுவரெலியா கோட்டக் கல்வி பணிப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தனியார் பேருந்து சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில்

400 இற்கும் அதிக போலி எஞ்சின், செஸி உடன் ஒன்றிணைக்கப்பட்ட வாகனங்கள் – சந்தேகநபர் கைது

editor

சஜித் அணியினரும் ஆர்ப்பாட்டத்தில்