உள்நாடு

ச.தொ.ச.வில் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று (01) முதல் அமுலாகும் வகையில் சில பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ பாசிப் பயறின் விலை 799 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை கௌப்பியின் விலை 880 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 243 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

மேலும், அனைத்து சதொச பல்பொருள் அங்காடிகளிலும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 300 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இலங்கை சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

தானிஷ் அலி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

ரயில் பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம்

சீமெந்து தட்டுப்பாட்டுக்கு மாஃபியாதான் காரணம்