தனது துயர நிலையைப் பற்றி விசாரிக்க நேற்று தினம் (01) என் வீட்டிற்கு வந்த மாண்புமிகு கொழும்பு மாநகர சபை மேயர் கெலி பல்தசார் மற்றும் மாண்புமிகு நகர சபை உறுப்பினர்களுக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாக சொஹரா புஹாரி தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் (CMC) வருடாந்த வரவு செலவுத் திட்டம் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் சோஹரா புஹாரி வாக்காளித்து இருந்தார்.
இதேவேளை கட்சியின் ஒழுங்கை மீறிய முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் திருமதி சோஹரா புஹாரியின் பதவி நீக்கப்படுவதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.
