2025/26 பெரும் போகத்தில் இலங்கையில் சோளம் பயிரிடும் விவசாயிகளை பதிவு செய்வதற்கான வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த திணைக்களம், www.agrarian.lk மற்றும் www.agrariandept.gov.lk ஆகிய இணையத்தளங்களில் இதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோளம் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் இந்த அமைப்பில் பதிவு செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டிய திணைக்களம், அது தொடர்பில் அனைத்து விவசாயிகளுக்கும் அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்வது குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கமநல அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.