அரசியல்உள்நாடு

சோபா சிப் வதுல தேசிய வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாணத்தில் ஆரம்பம்

அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சோபா சிப் வதுல தேசிய வேலைத்திட்டத்தின் சப்ரகமுவ மாகாண ஆரம்ப நிகழ்வு இன்று (02) சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் எம்பிலிபிட்டிய சந்திரிகாவெவ ஜயந்தி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

Clean Sri Lanka நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலை நேசிக்கும் உணர்வுள்ள ஒரு தலைமுறையை உருவாக்குவதற்காக அரசாங்கம் இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இது விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு, இலங்கை ஹதபிம அதிகார சபை மற்றும் S-Loan நிறுவனத்தின் துரு கப கரு நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து நாட்டில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஐம்பது பாடசாலைகளில் பசுமை வலயத்திற்குள் அமைக்கப்படும் வெளிப்புறத் திறந்த வகுப்பு அறைகளை அமைக்கும் தேசிய திட்டமாக இது அமைகின்றது.

சோபா சிப் வதுல தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று (02) முற்பகல் 8.00 மணிக்கு பிரதம மந்திரி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் இரத்மலானை இந்து வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதற்கு இணையாக, ஆளுநர்களின் தலைமையில் மாகாண மட்டத்திலான நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ. சுனிதா, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சாமர பமுணுஆரச்சி, மாகாண கல்வி அமைச்சின் திட்டமிடல் பிரிவு பணிப்பாளர் நெவில் குமாரகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

editor

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 165 பேர் வீடுகளுக்கு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மனு ஒத்திவைப்பு

editor