உள்நாடு

 சொகுசு புகையிரத சேவை விரைவில்..

(UTV | கொழும்பு) –  சொகுசு புகையிரத சேவை விரைவில்..

கொழும்பிலிருந்து பதுளை வரை புதிய சொகுசு புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசு புகையிரத சேவை பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வரவுள்ளது.

சொகுசு ரயில் சேவை பிரதி செவ்வாய் கிழமைகளில் கொழும்பிலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு எல்ல ஊடாக மாலை 4.00 மணிக்கு பதுளையை அடைந்து மறுநாள் காலை 6.00 மணிக்கு புறப்பட்டு மாலை 6.00 மணிக்கு கொழும்பை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் விலை $99.99 ஆகும். விஷேடமாக பணத்திற்கேற்ற சிறந்த அனுபவமும் சேவையும் கிடைக்கும் என்றும் நட்சத்திர வகுப்பில் காலை உணவு, மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும் என்றும் அரிசிக்கப்பட்டுள்ளது,

ரம்புக்கனை, பேராதனை சந்தி, நாவலப்பிட்டி, ஹட்டன், சென்ட் கிளேர் நீர்வீழ்ச்சி, நானுஓயா எல்ஜின் நீர்வீழ்ச்சி, பட்டிப்பொல புகையிரத நிலையம் ஆகிய பிரதேசங்களில் புகையிரதம் நிறுத்தப்படும் எனவும்

மேலும், இந்த அழகிய பயணத்தின் போது கண்டி புகையிரத நிலையத்தில் கலை கலாசார நிகழ்ச்சியை காணும் வாய்ப்பும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கருணாவை கைது செய்யுமாறு அடிப்படை உரிமை மனு தாக்கல்

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

editor

தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணையைப் புறந்தள்ளி ரணில் விக்கிரமசிங்கவின் பாதையில் செல்கிறது – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor