உள்நாடு

சைக்கிளில் சென்ற 11 வயதுடைய சிறுவன் விபத்தில் சிக்கி பலி

காலி – கொழும்பு பிரதான வீதியில் வெட்டுமகடை சந்திக்கருகில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த சிறுவன் ஒருவன் லொறி ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளான்.

காலிப் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த லொறி, நேற்று (07) இரவு வீதியை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டியில் மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த அச்சிறுவன் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளான்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் 11 வயதுடையவன் எனவும், கட்டுக்குறுந்த பிரதேசத்தைச் சேர்ந்தவன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் களுத்துறை நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துக்கு காரணமான லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்குப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சகல சமூகங்களும் தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த அனைவரும் முன் வரவேண்டும் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் ரிஷாட் எம்.பி

editor

பலத்த மழை காரணமாக இரண்டு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

editor

முழு நாட்டுக்கும் அவப் பெயரை ஏற்படுத்தும் – டலஸ் அழகப்பெரும

editor