கிசு கிசுவிளையாட்டு

சேவாக்-டோனிக்கு விடுத்த கட்டளை…

(UTV|INDIA)-இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. இதற்காக அனைத்து நாட்டு அணிகளும் தயாராகி வருகின்ற்ன போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி அங்கு தொடர்ந்து 8 தொடர்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை போட்டிகள் வரை மகேந்திர சிங் டோனி இந்திய் அணியில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் டிவி பேட்டி ஒன்றில் கூறுகையில், இங்கிலாந்தில் சமீபத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அணியில் இடம் பிடித்து அறிமுக டெஸ்டில் சதமடித்துள்ளார்.

தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரிஷப் பந்த், உலகக் கோப்பை போட்டிக்கு முன் 15 அல்லது 16 போட்டிகளில் விளையாட உள்ளார்.

அவரை விட டோனிக்கு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்ல டோனி நிச்சயம் பங்களிப்பார். எனவே அதுவரை டோனி கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட வேண்டும். இது எனது சொந்த கருத்து மட்டுமே என தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சகலத்துறை ஆட்ட நாயகன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களது இறக்குமதிக்கு தடை

பொது மன்னிப்பு வழங்கிய ஐசிசி