சூடான செய்திகள் 1

சேனா படைப்புழு தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பிலான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)-சேனா படைப்புழு தாக்கத்தினால் பயிர்நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலான மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று(24) ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்த நடவடிக்கைக்காக, கிராம சேவையாளர் பிரிவுகளில் குழுக்கள் நியமிக்கபட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரும் படைப்புழு ஒழிப்புப் பிரிவின் தலைமை அதிகாரியுமான அனுர விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, படைப்புழுவைக் கட்டுப்படுத்த முடியாதவாறு காணப்படுகின்ற பயிர் நிலங்களுக்கு சேதனப் பசளைகளுக்கான மானியம் வழங்குவதற்கு விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

திஸ்ஸமகாராம பகுதி கடைகளில் தீ விபத்துச் சம்பவம்

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்

பிரதமர் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு விஜயம்