கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால் 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதிக் கொடுப்பனவு இன்று (15-12-2025) சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சில் கையளிக்கப்பட்டது.
வக்ஃப் சபையின் தலைவர் எம்.எல்.எச்.எம் ஹுசைன் அவர்கள், குறித்த நிதிக் காசோலையை சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இந்நிகழ்வில், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களும் வக்ஃப் சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டனர்.
-ரிஹ்மி ஹக்கீம்
