உள்நாடு

செவ்வாய் முதல் மின்சக்தி அமைச்சராக டலஸ் இல்லை – டலஸ்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியிலான மின் தடங்கலுக்கு மின்சக்தி அமைச்சே காரணம் என்றால் பதவி விலகத் தான் தயார் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக கடந்த 17ம் திகதி மின்சார விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்ட நிலையில், குறித்த குழுவின் அறிக்கை நாளை திங்கட்கிழமை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், மின் துண்டிப்புக்கு மின்சக்தி அமைச்சு பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால் அது தொடர்பாக தான் எடுக்கும் நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கருத்து வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய, தான் 96 மணித்தியாலங்களே மின்சக்தி அமைச்சராக இருந்துள்ளேன் என்றும் மின்சக்தி அமைச்சே தவறுக்கு காரணம் என்றால், செவ்வாய்க்கிழமையிலிருந்து மின்சக்தி அமைச்சிற்கு வேறு ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்வு இலங்கையில் முதற்தடவையாகப் பதிவாகும் ஒரு நிகழ்வாக அமைய வேண்டும் என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் – மகிந்த தேசப்பிரிய

editor

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபரின் சகோதரி கைது

editor

போலி கடவுச்சீட்டுக்கள் தயாரிப்பு – திணைக்களத்தின் முக்கிய அதிகாரி கைது!

editor