உள்நாடு

செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதி பலி

அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் செல்ஃபி எடுக்கச் சென்ற தாயும் மகளும் ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இரத்தினபுரியில் இருந்து அனுராதபுரம் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டி ஒன்றை காண வந்த தாயும் மகளுமே இந்த அசம்பாவிதத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

18 வயதுடைய மகளும் 37 வயதுடைய தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இருவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த போது காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலில் அவர்கள் மோதுண்டுள்ளனர்.

செல்ஃபி எடுக்கும்போது அவர்களுடன் மற்றொரு இளைஞரும் அங்கு வந்திருந்த போதும் அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கரையோர ரயில் சேவைகளது நேர அட்டவணையில் மாற்றம்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்திய திரைப்பட படப்பிடிப்பு!

editor