உள்நாடுபிராந்தியம்

செம்மணி புதைகுழி உட்பட பல விடயங்களுக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்

சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) யாழ்ப்பாண நகரப் பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம், பட்டலந்தை வதை முகாம் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம், ஏனைய புதைகுழி விவகாரம் போன்றவற்றுக்கு உடனடி விசாரணைகளையும், நீதியையும் வேண்டி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி, “அனைத்து காணாமல் ஆக்கல்களுக்கும் இப்போதாவது நீதியை வழக்கு, செம்மணி மை மீண்டும் புதைக்க இடம்கொடுக்காமல் உண்மையை வெளிப்படுத்து, மீண்டும் மீண்டும் அடக்குமுறைகள் வேண்டாம், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே நீக்கு, அனைத்து தேசிய இனங்களுக்குமான உரிமையை உறுதிசெய்” என்ற வாசகங்களை எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் பௌத்த மதகுருக்கள், சமவுரிமை இயக்கத்தினர், வசந்த முதலிகே, சிங்கள மக்கள், தமிழ் மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

-பு.கஜிந்தன்

Related posts

நாட்டில் இதுவரை 1863 பேர் குணமடைந்தனர்

இன்று முதல் 10 மில்லியன் முட்டைகள் சந்தைக்கு!

இன்று UNP இனது சத்தியாக்கிரகப் போராட்டம்