உள்நாடுபிராந்தியம்

செம்மணியில் பால் போச்சியுடன் குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதி மீட்பு

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த எலும்பு கூட்டு தொகுதியுடன் அடையாளம் காணப்பட்ட பால் போச்சியும் அகழ்ந்து எடுக்கப்பட்டு, சான்று பொருளாக அடையாளப்படுத்தப்பட்டு, நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” புதைகுழியில் குழந்தை ஒன்றினது எலும்பு கூட்டு தொகுதியும், அதனுடன் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் பால் போச்சி ஒன்றும் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவை முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ரயில் கட்டணம் உயர்வு

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மைத்திரி எதிர்ப்பு

HMPV ஆபத்தான வைரஸ் தொடர்பில் விசேட அவதானம்