உள்நாடுபிராந்தியம்

செம்மணியில் இன்றும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று (05) புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இன்று 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் 44 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில், 53 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 17 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இதுவரையில் 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் நாளை (05) நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-பிரதீபன்

Related posts

ராஜபக்ஷ அரசுடன் எவ்வித கணக்குகளையும் நாம் வைத்துக் கொள்ளவில்லை [VIDEO]

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா, உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறவும்

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 142 ஆக உயர்வு