வகைப்படுத்தப்படாத

சூடானில் பழங்குடியினர் மோதலில் 37 பேர் உயிரிழப்பு

(UTVNEWS|COLOMBO) – சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் பழங்குடியின மக்களிடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 37 பேர் உயிரிலந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சூடான் நாட்டின் கிழக்கு பிராந்தியமான ரெட் சீ மாநிலத்தில் பானி அமீர் மற்றும் நூபா ஆகிய பழங்குடியின மக்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது.

போர்ட் சூடான் பகுதியில் பயங்கர ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 200 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த

சம்பவ இடத்தில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த மோதல் சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக நிறுவப்பட்ட இறையாண்மை சபை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பம்

යෝෂිත – නිතීෂා යුවලට සුබ මංගලම්

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு