வகைப்படுத்தப்படாத

சுஷ்மா , ரவி சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று சந்தித்துள்ளார்.

தமது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இதையடுத்து, வெளிவிவகார அமைச்சருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பது குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இதன்போது இணக்கம் காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

சீனாவில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு கத்திக்குத்து

நுவரெலியாவில் சட்டத்தரனிகள் பணிபகிஷ்கரிப்பு

இந்தோனேசிய கவர்னர் கைது