வகைப்படுத்தப்படாத

சுவாமி விபுலானந்தரின் 125 வது ஜனன தினத்தை முன்னிட்டு எழுச்சிப் பேரணி

(UDHAYAM, COLOMBO) –     மட்டக்களப்பில் முத்ததமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125வது ஜனன தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு எழுச்சிப் பேரணி  ஆரம்பமானது.

மட்டக்களப்பு சித்தாண்டியில் இன்று (26) காலை வெள்ளிக் கிழமை 7.00 மணிக்கு ஆரம்பமான இந்த பேரணியை தொடர்ந்து கல்லடி உப்போடையிலுள்ள மணி மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

சுவாமி விபுலானந்தர் தொடர்பில் எதிர்கால சந்ததியினர் பல விடயங்களை அறியாதவர்களாக உள்ளனர். இதன் காரணமாக சுவாமி விபுலானந்தரின் 125ஆவது ஜனன தினத்தை விசேட தினமாகக் கொண்டு இளம் சந்ததியினர் மத்தியில் சுவாமி விபுலானந்தர் தொடர்பான விடயங்களைத் தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

Honduras fishing boat capsizes killing 26

மிமிக்ரி செய்து அசத்திய டிரம்ப்

பட்டம் விட்டு விளையாடிய பிரதமர் மோடி