உள்நாடு

சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் கொலை

(UTV|காலி )- ஹபராதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உனவடுன பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரான பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு(09) மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இரண்டு நபர்கள் மேற்படி பெண்ணை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வற்காக ஹபராதுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 32 பேர்கைது

இன்றும் 289 பேர் தாயகத்திற்கு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் பெயர்களை பரிந்துரைக்க தடை!