சூடான செய்திகள் 1

சுற்றுலா வந்த பெண்ணுக்கு சில்மிசம் செய்தவர் கைது

(UTV|COLOMBO)-அபூதாபியில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் எல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் சமையல்காரர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த போது அதனை நிறுத்தி, அதில் எல்ல நகரத்திற்கு செல்ல முற்பட்ட போது பாலியல் துனபுறுத்தல் இழைக்கப்பட்டதாகவும், இதனால் அங்கிருந்து தப்பிச் சென்று ஹோட்டலுக்குள் சென்று தப்பித்துக் கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

அந்த ஹோட்டலில் உள்ள இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகளுடன் வந்து முச்சக்கர வண்டியை அடையாளம் கண்டுகொண்ட பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி விசாரித்த எல்ல பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், சந்தேகநபர் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று தெரிய வந்துள்ளது.

எல்ல பிரசேத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் சமையல்காரரான அவர் ஹோட்டல் உரிமையாளருக்கு தெரியாமல் ஹோட்டலுக்கு சொந்தமான முச்சக்கரவண்டியை எடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சவேந்திர டி சில்வாவுக்கு அமெரிக்காவின் தடை துரதிஷ்டமானது – சஜித்

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950

வேலையில்லா பட்டதாரிகளால் லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது