உள்நாடு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

கடந்த செப்டம்பர் மாதத்தில் 158,971 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது 30.24% அதிகரிப்பாகும் எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலிருந்து 49,697 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இது 31.3% ஆகும்.

அத்துடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் பிரித்தானியாவில் இருந்து 10,527 பேரும், ஜெர்மனியிலிருந்து 9,344 பேரும், சீனாவிலிருந்து 10,527 பேரும் மற்றும் பிரான்சிலிருந்து 5,144 பேரும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

அதன்படி, இந்த ஆண்டின் ஜனவரி 01 முதல் செப்டம்பர் 30, வரையான காலப்பகுதியில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,725,494 ஆகும்.

இவர்களில் 375,292 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தும், 122,144 பேர் ரஷ்யாவிலிருந்தும், 161,893 பேர் பிரித்தானியாவில் இருந்தும் வந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

தேசிய ரீதியாக சாதிக்க காரணமாக இருந்த கல்முனை வலய 500 ஆசிரியர்களுக்கு நற்சான்றுப் பத்திரங்கள் வழங்கி கௌரவிப்பு

editor

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்துவது தொடர்பான அறிவிப்பு

editor

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor