உள்நாடு

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு.

நாட்டிற்கு ஜூலை முதல் வாரத்தில் மாத்திரம் 43,083 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த காலத்தில் இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதுடன் பிரான்ஸ், அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 1,053,332 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு

சாமர சம்பத் எம்.பி நீதிமன்றுக்கு

editor

பங்குச்சந்தையிலும் ஊழல் [VIDEO]