உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த கவுடுல்ல தேசிய பூங்காவைப் பார்வையிட ஏராளமான மக்கள் வந்திருந்தாலும், பிரவேசச்சீட்டு வழங்குவதற்கு முறையான திட்டம் இல்லாததால் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.
இதற்கு அதிகாரிகள் உடனடி தீர்வை வழங்கி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எந்த சிரமமும் இல்லாமல் பூங்காவைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் ஆகஸ்ட் விடுமுறை காலம் காரணமாக, கவுடுல்ல தேசிய பூங்கா இந்நாட்களில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளன.
இதன் விளைவாக, சுற்றுலாப் பயணிகள் பிரவேசச்சீட்டு பெற்று பூங்காவைப் பார்வையிட பல மணிநேரமாக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த தாமதம் விலங்குகளைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை இழக்கச் செய்வதாக சுற்றுலாப் பயணிகளும் சுற்றுலா வழிகாட்டிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரவேசச்சீட்டுகள் வழங்க குறைந்த எண்ணிக்கையிலான அதிகாரிகள் மட்டுமே இருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இணையவழி பிரவேசச்சீட்டு வழங்கும் திறன் கொண்ட ஒரு சகாப்தத்தில் இவ்வாறான நிலைமை காணப்படுவது உண்மையிலேயே வருந்தத்தக்கது.
இந்த நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் உடனடி சேவையை வழங்குவதும், நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதும் அதிகாரிகளின் பொறுப்பல்லவா?