உள்நாடுசூடான செய்திகள் 1

சுய விருப்பத்தில் அலி சப்ரி ரஹீம் விலகிச்செல்வாரா?

(UTV | கொழும்பு) –

தங்க கடத்தலில் ஈடுபட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட பாராளுமன்ற   உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை இராஜினாமா செய்யுமாறு கோருவதற்கான தீர்மானமொன்றை கொண்டு வருவது தொடர்பில், பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

நேற்று (26) மாலை நடைபெற்ற பாராளுமன்ற விடயங்கள் தொடர்பான தெரிவுக்குழுவில், கட்சித் தலைவர்களால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதற்கமைய, எதிர்க்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டிற்கு அமைய, அலி சப்ரி ரஹீமை சுய விருப்பத்தின் ​பேரில் விலகிச்செல்லுமாறு முன்வைக்கப்பட்ட யோசனையை எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல வழிமொழிந்துள்ளார்

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘இலங்கையின் புலமைச்சொத்து வரலாற்றில் முக்கிய மைல் கல்’ பாராளுமன்றில் அமைச்சர் ரிஷாட் உரை!

பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் கை கால்கள் கட்டப்பட்டு கொலை

editor

பாடசாலை கல்விச்சுற்றுலாவுக்கு இனி புதிய நிபந்தனை