உள்நாடு

சுமார் 68 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது.

(UTV | மாத்தறை) – மாத்தறை – தெய்யந்தர – தெனகம பகுதியில் 68 கிலோகிராம் ஹெரோயினுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் கார் ஒன்றில் பயணித்த போது பொலிசார் மேற்கொண்ட சோதனையின் போது நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கைதானவர்களில், ஆண் நீர்கொழும்பு கட்டானை பகுதியினையும், பெண் கண்டியை சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

06வருடத்தின் பின் மரணதண்டனை வழங்கிய இளஞ்செழியன்

 வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சமூகங்களை மீளக்குடியேற ஜிஹான் ஹமீட்  அழைப்பு 

சரிந்துபோன வாக்குகளை மீண்டும் நிமிர்த்துவதற்காகவே, முஸ்லிம் சமூகத்தின் மீது பழி போடப்படுகிறது