உள்நாடுபிராந்தியம்

சுன்னாகம் பகுதியில் தங்க ஆபரணங்கள், பணத்தை திருடிய ஒருவர் கைது

சுன்னாகம் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாரால் அவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 7 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் திருடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீடொன்றில் திருடுவதற்கு முன்னர் அந்த வீடு அமைந்துள்ள ஊரில் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்று அங்கு தங்கியிருந்து தாம் திருடுவதற்கு முற்படும் வீட்டை முதலில் அவதானித்து வருவதாகவும், திருடிய பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்லும் வழக்கத்தை கொண்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-கஜிந்தன்

Related posts

கராபிட்டிய வைத்தியசாலையில் 6 கொரோனா தொற்றாளர்கள் பதிவு

“ரணிலை வாசியுங்கள்” – நாளை ஆரம்பமாகும் பிரசார திட்டம்

editor

அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் பயணித்த இளைஞர்கள் அடையாளம்