உள்நாடு

சுனில் ஜயவர்தனவின் கொலை : சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை சுய தொழிலாளர் தேசிய முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 8 பேரினதும் விளக்கமறியலில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மிரிஹானயிலுள்ள வாகனங்களை குத்தகைக்கு விடும் நிறுவனமொன்றில், முச்சக்கரவண்டி ஒன்றை விடுவிப்பது தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதை அடுத்து, கடந்த மாதம் 10ஆம் திகதி மாலை அவர் கொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 182 பேர் வீடுகளுக்கு

இலங்கையின் ஆராய்ச்சி துறையை வலுப்படுத்த தென்னாபிரிக்கா கவனம்

editor

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக சாணக்கியன், சுமந்திரன் ஐ.நா.வதிவிடப் பிரதிநிதியுடன் கலந்துரையாடல்

editor