சூடான செய்திகள் 1

சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது

(UTV|COLOMBO)-71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசிய கொடியை ஏற்றுமாறு அரசாங்கம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

71 ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் 4 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறுவுள்ளது.

இதேவேளை, சுதந்திர தின ஒத்திகை நடவடிக்கைகள் இன்றைய தினம் இடம்பெறாது என காவல்துறை ஊடகப்பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறும் என முன்னரே அறிவித்திருந்த போதும், அது இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறும் போது காலை 6.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை காலிமுகத்திடலை அண்மித்துள்ள வீதிகள் மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அரச நிறுவனங்கள் இரண்டிற்கு எதிராக சட்ட நடவடிக்கை

குற்றங்களுடன் சமத்தப்படாத முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை

இலங்கையர் சென்னையில் மாயம்