உள்நாடு

சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை இன்று ஆரம்பம்

(UTV|கொழும்பு)- 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று(31) மற்றும் எதிர்வரும் 2, 3ஆம் திகதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இந்தத் தினங்களில் காலை 6 மணி தொடக்கம் பகல் 1 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த சில வீதிகள் முழுமையாக மூடப்படும் எனவும் ஏனைய சில வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வைத்திய சேவை ஊழியர்களுக்கு விசேட அனுமதி

பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!