வகைப்படுத்தப்படாத

சுதந்திரதின கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

(UTV|MADAGASCAR)  கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில் உள்ள மைதானம் ஒன்றில் இடம்பெற்ற சுதந்திரதின கொண்டாட்டங்களின் போது மைதானத்தின் வாயில்கள் பொலிஸாரால் மூடப்பட்டதன் பின்னர் அங்கிருந்து வெளியேற முற்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நிகழ்வுகள் முடிவடைந்ததும் பாதுகாப்பு அதிகாரிகளால் மைதான வாயில்கள் திறக்கப்பட்டதாகக் கூறப்பட்டபோதும், முன்னதாக வாயில்கள் பொலிஸாரால் மூடப்பட்டமையே உயிரிழப்பிற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கீதாவின் மனு இன்று விசாரணைக்கு

டெல்லியை உலுக்கும் எச்.வன்.என்.வன் வைரஸ்

Serena Williams fined for damaging match court