உள்நாடுசூடான செய்திகள் 1

சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று(16) இடம்பெறவுள்ளது.

கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்றிரவு 7 மணியளவில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொது தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலை குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் ஊடாகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கை குறித்தும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட சோதனை

பிரதம நீதியரசரின் வாகன அணிவகுப்பை வீடியோ எடுத்த நபருக்கு விளக்கமறியல்

editor

சகல அரசாங்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பம்