சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் V8 வகை கார் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பாக சுஜீவ சேனசிங்க ஆறு முறை வாக்குமூலமளிக்கத் தவறிவிட்டதாக, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் அரச சட்டத்தரணி சக்தி ஜாகோடராச்சி நேற்று (03) தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு பல முறை சென்றதாகவும் ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும் அவர் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறினால், அவரை சந்தேக நபராகப் பெயரிட்டுக் கைது செய்யலாம் என்றும் அவர் நேற்று (03) அழைப்பாணை அனுப்பியபோது கூறினார்.
சுஜீவ சேனசிங்கவுக்காக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் நளின் லத்துவஹெட்டி, தனது கட்சிக்காரர் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார் அவர.
உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறினார். எனவே, இரண்டு வார காலத்துக்குப் பின்னர் வழக்கை நடத்துமாறு அவர் நீதிமன்றத்தைக் கோரினார்.
இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்க விரும்புவதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, நளின் லத்துவஹெட்டி, கட்சிக்காரர் திறந்த நீதிமன்றத்தில் இல்லாதபோது அறிக்கை வெளியிடுவது நியாயமில்லை என்று கூறினார்.
அவரால் ஆலோசனை பெற முடியாததாலும், வழக்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டதாலும் குற்றப் பத்திரிகையை ஒப்படைத்து, குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று விசாரிப்பது மட்டுமே தேவை என்று நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டினார்.
ஆட்சேபனையை புறக்கணித்து, அரசு வழக்கறிஞருக்கு வாக்குமூலமளிக்க அனுமதியளித்த நீதிவான், சந்தேக நபரான சுஜீவ சேனசிங்கவை 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அன்றைய தினம் மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார். வழக்கு 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.