உள்நாடு

சுகாதார உத்தியோகத்தர்கள் பணி பகிஷ்கரிப்பில்!

(UTV | கொழும்பு) –

வைத்தியசாலையில் நிலவிவரும் ஆளனி மற்றும் மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக்கோரி திருகோணமலை பொது வைத்தியசாலை சுகாதார உத்தியோகத்தர்கள் இன்று . பகல்  அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

திருகோணமலை வைத்தியசாலையில் நிலவிவரும் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யக்கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் குறித்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அகில இலங்கை ரீதியாக இடம்பெறும் இப்போராட்டத்தை அகில இலங்கை சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் இயக்கம் என்பன ஏற்பாடு செய்திருந்தன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

குண்டுவெடிப்பு திட்டம் எப்படி? அசாத் மௌலானாவின் மிக முக்கிய வாக்குமூலம் இதோ

தற்போது அவசர அமைச்சரவைக் கூட்டம்

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய ​மேலும் 181 இலங்கையர்கள்