சூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சின் இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன

(UTV|COLOMBO) சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சால் நடத்த ஏற்பாடாகியிருந்த, குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான செயற்றிறன் பரீட்சையும் வைத்திய அதிகாரிகளுக்கான பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரநிலையைக் கருத்திற்கொண்டே, இந்தமாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த குறித்த இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இரு பரீட்சைகளும் நடத்தப்படும் திகதி பின்னர்அறிவிக்கப்படுமென, சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல் நடத்தாமலேயே உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஏற்பாடு – சட்டமூலம் தயார்

பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானியாக ஷவேந்திர

சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும் அமுலில்