கிசு கிசுசூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சருக்கு எதிராக பத்து இலட்சம் கையெழுத்துகள்

(UTV|COLOMBO) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து, பத்து இலட்சம் கையெழுத்துகளுடனான மனுவொன்றை முன்வைக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதுடன்  பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் முதற் கட்ட நடவடிக்கை களுத்துறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

மேற்படி அத்துடன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறையிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

அங்குணுகொலபெலஸ்ஸ சம்பவம் தொடர்பிலான விசாரணை அறிக்கை இன்று(21) கையளிப்பு

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் இன்றிலிருந்து ஆரம்பம்

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்