நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கடந்த 10 நாட்களில் 31 அனர்த்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த நவம்பர் 17 ஆம் திகதி முதல் இன்று (27) வரை 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 79 பிரதேச செயலாளர் பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் 14 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 10 பேர் காயமடைந்துள்ளதுடன், 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 பாதுகாப்பு முகாம்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அனர்த்தம் காரணமாக 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மாகாண ரீதியாகப் பதிவான உயிரிழப்பு விபரங்கள்:
ஊவா மாகாணம்: 18 பேர்
சப்ரகமுவ மாகாணம்: 7 பேர்
மத்திய மாகாணம்: 4 பேர்
தென் மாகாணம்: ஒருவர்
வடமேல் மாகாணம்: ஒருவர்
