உள்நாடு

சீரற்ற வானிலை – சுமார் 1000 பாடசாலைகள் பாதிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்தார்.

அதற்கமைய, பாடசாலை செல்லும் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் இந்த அனர்த்தத்தினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 16 ஆம் திகதி திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“எந்தப் பிரதேசத்தில், எந்தப் பாடசாலைகள் திறக்கப்படும் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளை (8) அல்லது செவ்வாய்க்கிழமை (9) வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.

இப்பாடசாலைகளைத் திறப்பதுடன், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத வினாத்தாள்களை 2026 ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது” எனவும் அவர் கூறினார்.

Related posts

நீதிவான்கள் இடமாற்றத்தில் பொலிஸ் மா அதிபர் தலையீடு! – நாமல் ராஜபக்ஷ

editor

ஊரடங்கை அறிவிக்கும் நோக்கமில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

editor

வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி அநுர

editor