உள்நாடு

சீரற்ற வானிலையால் பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்பு

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (04) இரவு 07.00 மணிக்கு வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளதுடன், 341 பேர் காணாமல் போயுள்ளனர்.

இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,231 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்முகாம்களில் 51,023 குடும்பங்களைச் சேர்ந்த 171,778 பேர் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சொத்து சேதங்களைப் பொறுத்தவரையில், 2,303 வீடுகள் முழுமையாகவும், 52,489 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய தினமும் அதிவெப்பமான வானிலை

மீண்டும் சிறைச்சாலை மருத்துவமனையில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – துமிந்த சில்வா மனு தாக்கல்

editor

இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளுக்கு உள்நுழையத் தடை