சூடான செய்திகள் 1

சீரற்ற வானிலையால் இரண்டு விமானங்கள் மத்தளைக்கு திருப்பம்

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இரண்டு விமானங்கள் மத்தளை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக விமான நிலைய கடமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை நிலவிய அதிகூடிய மழையுடனான அசாதாரண காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டுபாய் மற்றும் இந்தியா, மும்பாயிலிருந்து வந்து இன்று அதிகாலை தரையிறங்கவிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குரிய இரண்டு விமானங்களே இவ்வாறு மத்தளை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்ப்டுட்டுள்ளது.

இந்த விமானங்கள் இரண்டும் காலை 7 மணிக்கு பின்னர் மத்தளை விமான நிலையத்திலிருந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

2018 ஆம் ஆண்டின் அரச புகைப்பட விழா

BREAKING NEWS – மாவை சேனாதிராஜா காலமானார்

editor

சிகரட் தொகையொன்றை வைத்திருந்த இந்திய நாட்டவர் கைது