உள்நாடு

சீரற்ற வானிலையால் இதுவரை 4 பேர் உயிரிழப்பு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.

387 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், 02 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

36 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் திம்பிரிகஸ்யாய பகுதியில் 30 பேர் பாதுகாப்பு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம்

நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூடவுள்ளது

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு