தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது.
எனினும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
குறிப்பாக பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு, எமில் நகர் உள்ளிட்ட கடற்கரையோர பகுதிகளில் இவ்வாறு கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நேற்று (10) காலை முதல் மறு அறிவித்தல் வரை கடல் தொழிலுக்குச் செல்லவில்லை.
இதேவேளை நேற்று (10) அசாதாரண வானிலையால் பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக விடத்தல்தீவு துறை ஊடாக கடற்றொழிலுக்கு செல்லும் மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் மாவட்ட மீனவர்களும் தொழிலுக்குச் செல்லவில்லை.
இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
-ஜோசப் நயன்
