உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவைகள் மட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரயில் பாதைகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமை, வெள்ள நிலை காரணமாக பிரதான பாதையில் கொழும்பில் இருந்து பொல்கஹவெல வரையிலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிலாபம் மற்றும் புத்தளம் இடையிலான புகையிரத சேவைகளும் தடைப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மொரட்டுவ துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்

அஜித் பிரசன்ன உட்பட இருவர் மீண்டும் விளக்கமறியலில்