உள்நாடு

சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அண்மைய மாதங்களில் சீனாவிலிருந்து இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் மூன்றாவது உயர் அதிகாரியாக இவர் இருப்பார்.

வெளியுறவு அமைச்சர் வாங் யி தனது பிராந்திய பயணத்தின் ஒரு பகுதியாக இங்கை வருவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் அவர் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஒரு மெய்நிகர் சந்திப்பிலும் உரையாற்றினார்.

இதன்போது கொவிட் -19 கட்டுப்படுத்துதல் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஒத்துழைப்பு குறித்து அவர் விவாதித்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் அரசியல் சபை உறுப்பினர் மற்றும் சீன கம்யூனிச கட்சியின் மத்திய செயற்குழுவின் வெளிவிவகார ஆணைக்குழுவின் அலுவலக பணிப்பாளர் யங் ஜியேஷி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அதன் பின்னர் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங் கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோரையும் சந்தித்து பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்த ஒப்புக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மன்னாரில் இளம் பெண் சடலமாக மீட்பு

editor

இன்றும் இடியுடன் கூடிய மழை

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

editor