சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இன்று (12) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
தென்னாப்பிரிக்காவின் டர்பனில் இருந்து வந்த அவர் உட்பட 17 பேர் கொண்ட சீனக் குழு, சீனாவுக்குச் செல்லும் வழியில் இலங்கை வந்தது.
இலங்கைக்கான சீனத் தூதர் குய் செங்ஹோங், தூதரகத்தின் உயர் அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சின் கிழக்காசியா மற்றும் ஓசியானியாவின் பணிப்பாளர் நாயகம் சாவித்ரி பனபோக்கே ஆகியோர் அவர்களை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்தனர்.
சீன வெளியுறவு அமைச்சரும் அவரது குழுவினரும் இன்று (12) பிற்பகல் சீனாவுக்குப் புறப்படவுள்ளனர்.
