உள்நாடு

சீன பாதுகாப்பு அமைச்சர் நாட்டிலிருந்து விடைபெற்றார்

(UTV | கொழும்பு) – இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங், சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

நேற்று முன்தினம் (27) நாட்டை வந்தடைந்த அவர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோரை நேற்று (28) சந்தித்து பேசினார்.

இந்நிலையில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் இன்று காலை 8.55 மணியளவில் சீனா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

அவருடன் 37 பேர் இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அனைவரும் சீன விமான படைக்கு சொந்தமான பீ-4026 என்ற விசேட விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

Related posts

வவுனியா, ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை – அமைச்சர் சுனில் குமார கமகே

editor

சிறுவர்களிடையே பரவும் நோய்: அவதானம்

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!