உலகம்

சீன படைகளுடன் மோதல் ஏற்பட்ட லடாக்கிற்கு மோடி திடீர் விஜயம்

(UTV | இந்தியா) – எல்லை மோதல் நடந்த லடாக் பகுதியில் இந்தியா பிரதமர் மோடி இன்று(03) திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். குறித்த இந்த சம்பவத்திற்கு பிறகு எல்லையில் போர் பதற்றம் உருவானது.
பதற்றத்தை தணிக்க இருதரப்பிலும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது.

இந்த சூழ்நிலையில் லடாக்கில் உள்ள லே பகுதிக்கு இன்று திடீரென பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்குள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு நிலவரங்களை ஆய்வு செய்தார். அவருடன் இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத்தும் ஆய்வு செய்துள்ளார்.

Related posts

மகஸ்ஸார் பகுதியில் தேவாலயம் ஒன்றுக்கருகில் குண்டு வெடிப்பு

இங்கிலாந்தில் வைரலாகும் ‘டெல்டா’

வெளிநாட்டு பயணங்களை உடனடியாக இரத்து செய்ய தீர்மானம் – திருத்தந்தை பிரான்சிஸ்