உலகம்

சீன தூதரகங்களை மூட உத்தரவு – அமெரிக்கா

(UTV|அமெரிக்கா)- அமெரிக்காவின் ஹூஸ்டன், டெக்சாஸ் மாகாணங்களில் உள்ள சீனத் துணைத் தூதரகங்களை வெள்ளிக்கிழமைக்குள் மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

உளவு வேலையில் ஈடுபட்டதால் சீன தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.

வணிகப் போர், கொரோனா தொற்று, ஹாங்காங் தொடர்பான சர்ச்சைக்குரிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவற்றியது உள்ளிட்ட பிரச்சனைகளில், அமெரிக்கா சீனா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, சீன ஆதரவு ஹேக்கர்கள் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்துவரும் ஆய்வகங்களை இலக்கு வைத்திருப்பதாக அமெரிக்காவின் நீதித்துறை குற்றம்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகளவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது

கச்சத்தீவு தொடர்பில் தவெக தலைவர் விஜய் அதிரடி அறிவிப்பு

editor

DNA மரபணுக்கள் மூலம் உருவாகியுள்ள தடுப்பூசி