உள்நாடு

சீன சொக்லேட் வைத்திருந்தவருக்கு அபராதம் – யாழில் சம்பவம்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட, மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி.அஜந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, அனுமதியற்ற வகையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு, உரிய ஆவணங்கள் இன்றி சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்தமையை கண்டறிந்தனர்.

அவற்றினை சான்று பொருட்களாக கைப்பற்றிய சுகாதார பரிசோதகர் , கடை உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கு வியாழக்கிழமை (20) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை , கடை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் 64 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

Related posts

இன்று காலை முதல் புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜினாமா

editor

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் அரசுக்கு எச்சரிக்கை